வரிடமும் கோபப்படாதவர் என்று பெயர் எடுத்தவர் எஸ்.பி.பி. எவரிடமும் அதிர்ந்து கூடப் பேசாத அவர், கடந்த டிசம்பரில் தற்கொலை செய்துகொண்ட... ஒரு இசையமைப்பாளரின் நினைவாஞ்சலி நிகழ்ச்சியில் கண்ணீர் வழிய வழிய பேசினார்.

Advertisment

அந்த உருக்கமான உரையில் இருந்து...

இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் பேச எனக் குப் பிடிக்கலை. ஒருவர் மறைந்தால் அஞ்சலி செலுத்துவது சகஜம். அந்த சோகம் கொஞ்சநாளில் மறைந்துவிடும். ஆனால், அப்படிப்பட்ட மரணம் அல்ல இது. அவர் மீது எனக்குக் கோபம்தான் வருது.

Advertisment

நம் உயிர் மீது நமக்கு அதிகாரம் இல்லை.

p

அதைப் போக்கிக்கொள்ளும் அதிகாரத்தை நமக்கு யாரும் கொடுக்கலை. இங்கே தற்கொலைகள் மூலம் பலரும் அநியாயமாக உயிரை விடுவதைப் பார்த்துக் கலங்கிப் போகிறேன். யாரா இருந்தாலும்... எந்த வயதாக இருந்தாலும் இப்படியொரு முடிவை எடுக்கக்கூடாது. இந்த வாழ்க்கை அபூர்வம். நாமும் மகிழ்ந்து நம்மைச் சார்ந்தவர்களையும் அதில் மகிழவைக்கனும். அதுதான் வாழ்க்கை. அதற்குத்தான் வாழ்க்கை.

டிப்ரஷன்ங்கிறது கேன்சரை விடவும் கொடிய நோய். அப்படி இருப்பவர்களை அடையாளம் கண்டுபிடிச்சி டாக்டர்களிடம் அனுப்பி சரிசெய்யனும். அப்படிபட்டவங்களை பார்த்தாலே தெரியும். இங்கே இவர் இப்ப படமா மாறிட்டார். அதுக்கு அவருக்கு என்ன அதிகாரம் இருக்கு? கெட்டவங்களா இருந்தாக் கூட விடமுடியாது. இவர் ஜென்டில் மேன். சின்சியாரிட்டி, சிம்ளிசிட்டியானவர். ஒழுக்கமானவர்.

அவருக்கு எல்லோரும் அஞ்சலி செலுத்திட்டுப் போறதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவருக்கு நாம் அஞ்சலி செலுத்தி, அவரை மேலே அனுப்பிவைக்க னும், நாம் மட்டும் வாழனும் ... என்ன இது?

இந்தப் பிரபஞ்ச வெளியில் இந்த பூமி.. கடுகு மாதிரி இத்துணூண்டு இருக்கு. அதில் நாம எவ்வளவு சிறுசு... இதில் நாம் மத்தவங்களுக்கு நல்லது செய்யத் தான் நமக்கு புத்தி கொடுக்கப்பட்டிருக்கு. நல்லவிதமா பேசத்தான் சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கு. அதனால் எல்லாரையும் மகிழ்ச்சியாக்கி மகிழ வேண்டியது தானே. இங்க உங்க மனசைக் கஷ்டப்படுத்தற மாதிரி பேசியிருந்தா என்ன மன்னிச்சுக்கங்க. எல்லாரும் நல்ல இருக்கனும். நான் யார் மீதும் கோபப்படுறது இல்லை. ஆனா இந்த மாதிரி முடிவெடுக்கறவங்களப் பார்த்தா..எனக்குக் கோபம் வருது...அதுக்காக என்னை மன்னிச்சிடுங்க... எல்லாரும் நல்லா இருக்கனும்....